• முகப்பு
  • .
  • .
  • .
  • .

திங்கள், 30 நவம்பர், 2009

பேருந்து தினம்ன்று பேருந்து தினம். ,
தேர்வைக்கூட கண்டுகொள்ளாமல்
கொண்டாட நினைத்த தினம்.....

நாயகி பேருந்துக்கு
காகிதப்பூ அலங்காரம்,
பூக்கடை நண்பன் தயவில்
ஒரு குறைந்த விலை
பேருந்துயர மாலை,
பிறகு என் கைவண்ணத்தில்
உருவான முப்பரிமாண
எழுத்துக்களாலான முகப்பு அட்டை....

நாயகனுக்கு ஒரே ஒரு,
வெள்ளைப் புத்தாடை.....

பேருக்கு, ஒரு கோவிலில்
பூஜை செய்த பின்,
"மன்மத ராசா" வின் இசையோடு
ஒத்திசைவாய் குலுங்கியபடி
நகர்ந்தது பேருந்து......

ங்கள் ஆட்டத்தை
ஒரு தமிழ் நாடு அரசு
கடுப்போடு வெறித்துவிட்டு
புகையை கக்கிக் கடந்து போக,
கடுப்பான நம் நாயகன்,
அதி வேகமாய் அரசைக் கடக்க முயல,
புகையில் தொடங்கியது
ஒரு பகைப் போட்டி...

போட்டியின் நடுவே ஒரு
பைக் குறுக்கே பாய
நாயகன் பயத்தில் ஓரங்கட்ட
நிலை தடுமாறிச் சாய்ந்தது
சாலையோரப்பள்ளத்தில்..

டிக்கொண்டு வந்த நாங்கள்,
அமைதியாய் வெளியேற முயல,
ஆடாமல் வந்த பெண்கள்
கூச்சலிட்டே வெளியே வர
வந்தமர்ந்தோம் சாலையோரம்...

யாருக்கும் உயிர்ச்சேதம்
இல்லையெனத் தெரிந்தபின்பு
தொடங்கியது மறுபடியும்
குத்தாட்டம் நடு ரோட்டில்...

யிர்பிழைத்ததற்காக அல்ல...
எங்களோடு பயணிக்காமலே
மடிந்து
போன அன்றைய
கணிதத்தேர்வுக்காக...
-------------------------------------------------------------------------------------------------
காதலை விட்டு வெளியே வந்து, என்னால் முடிந்த வரை "Enter " பட்டனைத் தட்டி தட்டி வடித்த வரிகள் இவை...குறையிருந்தாலும், நிறையிருந்தாலும் மறக்காமல் கருத்துரையில் தெரிவிக்கவும்..
-------------------------------------------------------------------------------------------------

வியாழன், 19 நவம்பர், 2009

குறுந்தகட்டுக்கிறுக்கல்கள்-1------------------------------------------------------------------------------------------------

ணத்துடன்
தொலைந்து போனது,
என் பணப்பை.
பணம் போன வருத்தத்தில்
நான்...
நீ தந்த ஒற்றை நாணயம்
போன வருத்தத்தில்
என் மனம்....
-------------------------------------------------------------------------------------------------
ம் தேர்வு முடிவுகள்
அறிவிப்பு பலகையில்,
என் விரல் தேடியது
என் பெயரை,
என் விழி தேடியது,
உன் பெயரை....
-------------------------------------------------------------------------------------------------

-------------------------------------------------------------------------------------------------
நீ என்னைப் பார்த்து
கண் சிமிட்ட
நினைக்கிறாய்.
நான் அதை பார்த்து
கண் சிமிட்ட
மறக்கிறேன்....
-------------------------------------------------------------------------------------------------
நீ
பறித்து,
அரைத்து,
பூசிக்கொண்ட
மகிழ்ச்சியில்,
குளிர்ந்து போனது,
மருதாணி.....
-------------------------------------------------------------------------------------------------
கத்தின் அழகு
முகத்தில் தெரியுமாம்.
யார் சொன்னது.
உன் முகத்தின் அழகுதான்
எப்போதும் என்
அகத்தில் தெரியும்.....
-------------------------------------------------------------------------------------------------
[எங்கே என்னைப்பார்த்து யாராச்சும் "யாருமே இல்லாத வலையிலே யாருக்காகடா எழுதுறேன்னு " கேட்டு விடுவாங்களோ என்று பயத்துடன் பதிவை தொடங்கினேன். ] சென்ற பதிவில் நான் எழுதிய கவிதையை பாராட்டி, என்னை ஊக்கப்படுத்திய அனைத்து (மூன்று) அன்பர்களுக்கும் நன்றி. என் கல்லூரி காலத்தில் கிறுக்கியவற்றை இங்கே பதித்துள்ளேன். கோச்சுக்காம படிங்க....

நன்றி: இணைய தளம் (படங்களுக்காக)
-------------------------------------------------------------------------------------------------

வியாழன், 12 நவம்பர், 2009

சேறு-------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------
நீ இரவாடை அணிந்து,
வீட்டைப் பெருக்கும் பொழுதும்...
ன்னலோரப் பேருந்தில்,
உன் ஆடையோடு
காற்றுவிளையாடும் பொழுதும்...
ழை நீரில் நீ ஆடையைப் பிடித்து
நடக்கும் பொழுதும்...
ப்படியோ வந்து
என் மனதில்
அப்பிகொள்ளும்,
சேறு...

-------------------------------------------------------------------------------------------------
" சென்ற வாரம் பெய்த மழையால், நான் தங்கி இருந்த பகுதி முழுதும் சேறானது. இந்த சாலையில் தான் தினமும் நான் நடந்து அலுவலகம் செல்ல வேண்டும் .. செல்லும் வழியில் தோன்றிய ஒன்று....
-------------------------------------------------------------------------------------------------

புதன், 4 நவம்பர், 2009

வித்தியாசமா ஒரு வித்தியாசம் கண்டுபிடிப்போம்...

இப்ப கண்டு பிடிக்க முடியாது!!! கொஞ்ச காலம் பொறுத்து இருப்போம்.!!!