• முகப்பு
  • .
  • .
  • .
  • .

வியாழன், 19 நவம்பர், 2009

குறுந்தகட்டுக்கிறுக்கல்கள்-1

------------------------------------------------------------------------------------------------

ணத்துடன்
தொலைந்து போனது,
என் பணப்பை.
பணம் போன வருத்தத்தில்
நான்...
நீ தந்த ஒற்றை நாணயம்
போன வருத்தத்தில்
என் மனம்....
-------------------------------------------------------------------------------------------------
ம் தேர்வு முடிவுகள்
அறிவிப்பு பலகையில்,
என் விரல் தேடியது
என் பெயரை,
என் விழி தேடியது,
உன் பெயரை....
-------------------------------------------------------------------------------------------------

-------------------------------------------------------------------------------------------------
நீ என்னைப் பார்த்து
கண் சிமிட்ட
நினைக்கிறாய்.
நான் அதை பார்த்து
கண் சிமிட்ட
மறக்கிறேன்....
-------------------------------------------------------------------------------------------------
நீ
பறித்து,
அரைத்து,
பூசிக்கொண்ட
மகிழ்ச்சியில்,
குளிர்ந்து போனது,
மருதாணி.....
-------------------------------------------------------------------------------------------------
கத்தின் அழகு
முகத்தில் தெரியுமாம்.
யார் சொன்னது.
உன் முகத்தின் அழகுதான்
எப்போதும் என்
அகத்தில் தெரியும்.....
-------------------------------------------------------------------------------------------------
[எங்கே என்னைப்பார்த்து யாராச்சும் "யாருமே இல்லாத வலையிலே யாருக்காகடா எழுதுறேன்னு " கேட்டு விடுவாங்களோ என்று பயத்துடன் பதிவை தொடங்கினேன். ] சென்ற பதிவில் நான் எழுதிய கவிதையை பாராட்டி, என்னை ஊக்கப்படுத்திய அனைத்து (மூன்று) அன்பர்களுக்கும் நன்றி. என் கல்லூரி காலத்தில் கிறுக்கியவற்றை இங்கே பதித்துள்ளேன். கோச்சுக்காம படிங்க....

நன்றி: இணைய தளம் (படங்களுக்காக)
-------------------------------------------------------------------------------------------------

11 நினைவலைகள்:

LazySystemAdmin சொன்னது…

machi... super da... Romba nalla irukku....

Congrats and Keep rocking :)

~Parthi

Marimuthu Murugan சொன்னது…

Hello Parthi!! Thanks for the feedback machi..

Rajesh kumar சொன்னது…

கவிதைகள் ரொம்ப நல்ல இருக்கு.. கல்லூரி காலத்தில் கிறுக்கியதுன்னு சொல்றியே ..யார நெனச்சு கிறுக்கியதுணும் சொல்லேன்..!

Marimuthu Murugan சொன்னது…

மறு மொழிக்கு நன்றி ராஜேஷ்!!!

(..எந்த கிறுக்கிய நெனச்சு கிறுக்கினேன்னு தெரியல மச்சி!!! ...)

ஜெனோவா சொன்னது…

இப்பதான் புரியுது , காலேஜில கண்டிப்பா யாரையோ லவ்விருக்க போல ;-)

மருதாணியில் மனதும் குளிர்ந்தது நண்பா .. தொடரட்டும் ;-)

வாழ்த்துக்கள்

அடலேறு சொன்னது…

நல்ல கவிதை.,
//நீ
பறித்து,
அரைத்து,
பூசிக்கொண்ட
மகிழ்ச்சியில்,
குளிர்ந்து போனது,
மருதாணி.//

நான் ரசித்த வரிகள்

காதல்-ல இருந்து வெளிவர முயற்சி செய்ங்க மாரி.

Marimuthu Murugan சொன்னது…

///ஜோ.. ...நான் அப்படி லவ் பண்ணி இருந்தா, ஒரு போதும் "குளிர்ந்து போனது" ன்னு எழுதியிருக்க மாட்டேன்...
' வருத்தத்தில் காய்ந்து போனது' ன்னு எழுதியிருப்பேன்...
ஆனால், உன் மறுமொழியால் நான் குளிர்ந்து தான் போனேன்...நன்றி நண்பா..!!////

//// நன்றிங்க அடலேறு!!!... நான் நல்லாத்தாங்க இருந்தேன்....அது வேற ஒன்னும்
இல்லீங்க, இதோ மேல இருக்காரே ஒருத்தர், அவரு ஒரு நாள் தபு சங்கர் கவிதையைக்
கொடுத்து படிக்கச் சொன்னார். அதப் படிச்ச பிறகு தான் இப்படியெல்லாம் எழுத ஆரம்பிச்சேனுங்க.. ,....
நிச்சயமா வெளியே வர முயற்ச்சிக்கிறேன்.....////

Jayanthi சொன்னது…

மெல்லிய வார்த்தைகளை கொண்டு அற்புதமாக தீட்டிய உங்கள் கவிதைகளுக்கு வாழ்த்துக்கள்.

Marimuthu Murugan சொன்னது…

#ஜெயந்தி - முதல் வருகைக்கும் எனக்கு உற்சாகம் அளிக்கும் பதிலுக்கும் நன்றிங்க

தேவன் மாயம் சொன்னது…

நீ தந்த ஒற்றை நாணயம்
போன வருத்தத்தில்
என் மனம்.//

அட!!! சொல்ல வைத்தது உங்கள் வரிகள்!!

Marimuthu Murugan சொன்னது…

#தேவன்மாயம்- வணக்கம் .
உங்கள் முதல் வருகைக்கும் பதிலுக்கும் நன்றிகள்...
தமிழ் நண்பன் எனக்கு ஒரு நல்ல அறிமுகம்...