• முகப்பு
  • .
  • .
  • .
  • .

திங்கள், 7 டிசம்பர், 2009

பிறந்தநாள் பரிசு


------------------------------------------------------------------------------------------------
வெற்றிலையை எடுத்து
காம்பைக் கிள்ளி
கையில் வைத்துக்கொண்டு
என்னைத் தேடிய அமத்தா..

ழுகின்ற என்னைத் தேற்ற
அம்மாவிடம் பொய்யாய் அடிவாங்கி
பொய்யாய் அழுது என்னை
சிரிக்க வைத்த அண்ணா....

நான் கழற்றி வைத்த
சட்டைப் பையில்
பீடிக்கும் டீக்கும் உரிமையோடு
காசு துழாவும் அப்பா....

யிறு எவ்வளவு வளர்ந்தாலும்
ஏண்டா இளைச்சுட்டேன்னு
கூசாமல் கேட்கும் அம்மா...

நீங்கள் எல்லாம் என்னை
வழியனுப்பிவிட்டு திரும்பும்போது
எனக்குத் தெரியாமல்
உங்கள் கண்களில் இருந்து
வந்த ஒரு சொட்டு
கண்ணீர்த்துளியில் இருந்து
எடுத்துக்கொண்டேன்

ன் பிறந்தநாள் பரிசை..
-------------------------------------------------------------------------------------------------

9 நினைவலைகள்:

அடலேறு சொன்னது…

கலக்கல் கவிதை.,
காதல் கவிதைகளில் இருந்து சற்று தூரம் வந்துவிட்டீர்கள் போல, நல்ல மாற்றம் தான். கவிதை வரிகள் என் பழைய கால நினைவுகளையும் அசைபோட வைக்கிறது நண்பரே.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாரி

LazySystemAdmin சொன்னது…

மாரி,

கலக்கல் மச்சி.. உனக்குள்ள ஒரு கவிஞன் எப்பவும் அலெர்டா இருக்கான்..

வாழ்த்துக்கள் மச்சி.. இன்னும் நிறைய எதிர்பாக்குறேன் உன்கிட்ட..

-- பார்த்தி

prakash சொன்னது…

இது உண்மையில் நடந்த நிகழ்ச்சி தானே... பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா....!

Marimuthu Murugan சொன்னது…

உங்கள் நினைவுகளை அசைபோட்டு என் வரிகளை வெற்றி பெறச்செய்ததற்கு "நன்றிங்க" அடலேறு.. மன்னிச்சுடு பராசக்தி...)

ரொம்ப நன்றி பார்த்தி...I will try my level best நண்பா..

ஆமாம் பிரகாஷ்...உண்மைதான்...நன்றி நண்பா...

Balaji சொன்னது…

ஹாய் நண்பா கவிதை மிகவும் பிரமாதமாக இருந்தது வாழ்துக்கள்.

ஜெனோவா சொன்னது…

Happy Birthday Man!!
Best Wishes

தமிழ் உதயம் சொன்னது…

உண்மைதான். இதை விட வேறு என்ன பரிசு வேண்டும் பெரிசாய்.

தமிழ் உதயம் சொன்னது…

உண்மைதான். இதை விட வேறு என்ன பரிசு வேண்டும் பெரிசாய்.

Marimuthu Murugan சொன்னது…

""முதல் வருகைக்கும் , பதிலுக்கும் நன்றிங்க...பாலாஜி""

""நன்றி ஜோ நண்பா...""

""//உண்மைதான். இதை விட வேறு என்ன பரிசு வேண்டும் பெரிசாய்//
ரொம்ப சரியாச் சொன்னீங்க தமிழுதயம்.....முதல் வருகைக்கும் , பதிலுக்கும் நன்றிங்க...
(தமிழுதயம்---அருமையான பெயர் உங்கள் வலைக்கு...என்ன,, ஆங்கிலத்தில் இருப்பதுதான் கொஞ்சம் நெருடுகிறது...)""