• முகப்பு
  • .
  • .
  • .
  • .

திங்கள், 29 மார்ச், 2010

கோலக்கால கோலாகலம்



~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1. மார்கழி மாதத்தில்,
தினமும் அதிகாலை,
5லிருந்து 6 மணி வரை ,
காணத் தவறியதில்லை,
உன் கோலங்கள்....
என் மொட்டை மாடித்
தொலைவுக் காட்சியில்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
2. பூகோளத்தை ஆய்வு செய்யும்
தொழில் என்னுடையது..
சில சமயங்களில்
பூக்கோலத்தையும் ஆய்வு செய்ய
வைக்கிறாய்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
3. அரிசி மாவெடுத்து
நீ வாசலுக்கு வந்ததும்..
அரசிதான் மாவெடுத்து
வந்ததாய் எண்ணி
வரிசையில் வந்து
நிற்கின்றன
இந்த எறும்புகள்....
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
4. வாசலில் மட்டுமின்றி
உள்ளங்கையில் கூட
அழகாகக் கோலமிடக்
கற்று வைத்திருக்கிறாய்..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
5. எந்தக் கோலத்தில் உன்னைப்
பார்த்தாலும்
அழகாகவே தெரிகிறாய்.
குறிப்பாக,
அந்தக் கோலம் போடும்
கோலத்தில் மட்டும்
கொள்ளை அழகு...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

புதன், 17 மார்ச், 2010

குறுந்தகட்டுக்கிறுக்கல்கள்-3




<><><><><><><><><><><><><><>

ஒரு மாத காலமாக
தேர்வுக்குப் படித்தவற்றை
இப்படியா
ஒரு நொடியில்
மறக்கடிப்பாய்...

தேர்வறை முன்பு
ஆல் தி பெஸ்ட்
என்று சொல்லி...

<><><><><><><><><><><><><><>

உன் பேச்சும்
சிரிப்பும்
எப்போதும்
எதிரொலிப்பதே இல்லை...
தடைகளில் பட்டுத்
திரும்பினால் சரி..
தடைகளே விரும்பி
வைத்துக்கொண்டால் ?....

<><><><><><><><><><><><><><>