• முகப்பு
  • .
  • .
  • .
  • .

வெள்ளி, 16 ஏப்ரல், 2010

வேலை தேடும் வேலை(ளை)யில் ...



மூடிய கண்களின் மேல்
சிவப்பாய் ஏதோ தெரிய..
விழித்துப் பார்த்தால்
அன்றைய தினம்
என்னை எழுப்ப வந்த
நண்பன் சூரியன்....

எழுந்து பார்த்தால்
சமையலறையில்
மூன்று வேளைச் சோறு மட்டும்
என்னைப் பார்த்துப்
பல்லிளிக்கிறது ...

வயிற்றுக்கு உணவு செல்லாத
நிறைய வேளைகளில்
செவிக்கு உணவு தந்தன
ஊர் நூலகமும்,
உலவு மையங்களும்,

சில சமயங்களில்
சும்மா என்கிற
சாதாரண வார்த்தையை
எடுத்து கூர்தீட்டிக்
குத்திக் காட்டினார்கள்
சுற்றத்தார்கள்....

யாருமற்ற பகல்கள் மட்டும்
மெதுவாக இரவை நோக்கி
கர்ந்தது

யாவரும் உள்ள இரவுகளோ
வேகமாக விடியலை நோக்கிச்
சென்றது...

பிறகு,
மூடிய கண்களின் மேல்
சிவப்பாய் ஏதோ தெரிய....
............................................

2 நினைவலைகள்:

நேசமித்ரன் சொன்னது…

இந்தப் பார்வை தொட்டும் தொடாமல் வலி செய்யும் உணர்வுகள் சொல்லி கொஞ்சம் எள்ளி....

Marimuthu Murugan சொன்னது…

நன்றிங்க நேசமித்ரன்....