• முகப்பு
  • .
  • .
  • .
  • .

வெள்ளி, 23 ஜூலை, 2010

நீ - மழை நேர மழலையடி



xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
ரம் சேகரித்து வைத்த
மழைத்துளிகளால்
நீ நனைந்து
சிலிர்ப்பதைக் காண
காத்திருக்கிறேன்.
மரத்தடியில் ...

நீ மரத்தருகே
வருவதைக் கண்டதுமே
சிலிர்த்தது என்னவோ
மரம்...

நனைந்தது
என்னவோ
நான் தான்...
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
ன்னை போலவே தான்
எனக்கும்,
மழை நின்ற பின்
யூகலிப்டஸ் மரச்சாலையில்
நடந்து செல்லப் பிடிக்கும்.

உன்னை போலவே தான்
எனக்கும்,
மழை வரும் போது
காகிதக் கப்பல் செய்து
விளையாடும்
மழை நேர மழலையாய்
மாறப் பிடிக்கும்...

உன்னை போலவே தான்
எனக்கும்,
மழை நேரத்தில்
சாலையைக் கடந்த
தவளைகளைப் பிடிக்காது...

ஆனால்
இடி மின்னலோடு
மழை பெய்கையில் மட்டும்,
உன்னைப் போல
காதைப் பொத்தி
"அர்ஜுனா அர்ஜுனா"
என்று நான் கூறுவதில்லை...

மாறாக,
உன் பெயரைத்தான்
உரக்கக் கத்துவேன்....
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

2 நினைவலைகள்:

Rajesh kumar சொன்னது…

ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னா அது ரொம்ப சாதாரணமா இருக்கும் . என்ன சொல்றதுன்னு தெரில மாரி..
கவிதை ரொம்ப புடிச்சிருக்கு.. அடிக்கடி எழுது .. வாழ்த்துக்கள்

Prakash சொன்னது…

நிறைய அனுபவம் போல... வாழ்த்துக்கள்...