• முகப்பு
  • .
  • .
  • .
  • .

வியாழன், 7 அக்டோபர், 2010

கவிதை விதை விதைத்தவள்..`````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````
. ஒரே ஒரு விதைதான்
நீ விதைத்தாய்.
கணக்கற்ற கவிதைகள்
முளைக்கின்றன
என்னுள்..

. உன் சேலையின் நீளத்திற்கொரு
கவிதை இயற்றினேன்..
தலைப்பு மட்டும் கிடைக்கவில்லை.
கொஞ்சம் கொடேன்.
உன் சேலைத் தலைப்பை...

. இவ்வளவு அழகாக
கவிதை எழுதிப் போகிறாய்.
திசுத்தாளில் உதட்டுச்சாயம்..

. நான் என்ன எழுதினாலும்
அது கிறுக்கலாய் முடிகிறது.
நீ என்ன கிறுக்கினாலும்
அது கவிதையாய் முடிகிறது..

௫. நீ எப்போதும்
என்னுடன் இருக்க வேண்டும்.
நான் கவிதை எழுதும் நேரம் தவிர.

நீ அருகே இருந்தால்
எனக்கு பேச்சே வராது.
கவிதை மட்டும் எப்படி வரும்?.

. உன் பிறந்தநாளில்
நான் எழுதிய கவிதையொன்று..
" பூமியில் வாழும் நிலவொன்று
இருபத்து மூன்றாவது முறை
சூரியனைச் சுற்ற கிளம்பிய தினம்"
``````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````

வெள்ளி, 23 ஜூலை, 2010

நீ - மழை நேர மழலையடிxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
ரம் சேகரித்து வைத்த
மழைத்துளிகளால்
நீ நனைந்து
சிலிர்ப்பதைக் காண
காத்திருக்கிறேன்.
மரத்தடியில் ...

நீ மரத்தருகே
வருவதைக் கண்டதுமே
சிலிர்த்தது என்னவோ
மரம்...

நனைந்தது
என்னவோ
நான் தான்...
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
ன்னை போலவே தான்
எனக்கும்,
மழை நின்ற பின்
யூகலிப்டஸ் மரச்சாலையில்
நடந்து செல்லப் பிடிக்கும்.

உன்னை போலவே தான்
எனக்கும்,
மழை வரும் போது
காகிதக் கப்பல் செய்து
விளையாடும்
மழை நேர மழலையாய்
மாறப் பிடிக்கும்...

உன்னை போலவே தான்
எனக்கும்,
மழை நேரத்தில்
சாலையைக் கடந்த
தவளைகளைப் பிடிக்காது...

ஆனால்
இடி மின்னலோடு
மழை பெய்கையில் மட்டும்,
உன்னைப் போல
காதைப் பொத்தி
"அர்ஜுனா அர்ஜுனா"
என்று நான் கூறுவதில்லை...

மாறாக,
உன் பெயரைத்தான்
உரக்கக் கத்துவேன்....
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

வியாழன், 1 ஜூலை, 2010

பாத்திரங்கள்..


.........................................................................................................
பாத்திரங்களையெல்லாம்
சுத்தம் செய்து வைக்கும்
பாத்திரமாக
அக்கா ..

சாப்பிட்ட பாத்திரங்களைக் கூட
கழுவாமல்
அப்படியே எறிந்துவிட்டுச்
செல்லும் பாத்திரம்
நான்...

வ்வளவு கஷ்டத்திலும்
வீட்டுப் பாத்திரங்களில்
உணவுக்கு குறை இன்றி
குடும்பத்தை காக்கும்
பாத்திரமாய் அப்பா...

ழை வரும் போது
வீட்டில் ஒழுகும் இடங்களில்
ஓடிச் சென்று
பாத்திரங்களை வைக்கும்
பாத்திரம்
அம்மா ...
........................................................................................................

செவ்வாய், 15 ஜூன், 2010

குறுந்தகட்டுக்கிறுக்கல்கள்-5Thanks to flickr.com
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கடைசி நேரத்தில் வந்து
காற்றில் வரைந்து
சொல்லிவிட்டுப் போனாய்.
பிளெமிங் இடக்கை மற்று வலக்கை
விதிகளை..

நானும்
நீ சொன்னதை
பிழையின்றித் தேர்வில்
எழுதி விட்டு வந்தேன்..
இடக்கை விதியை
வலக்கை விதி என்றும்
வலக்கை விதியை
இடக்கை விதி என்றும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வியாழன், 20 மே, 2010

முகநக நட்பாம்...___________________________________________________________________

வீட்டில் பணத்தைத் திருடியதால்
தன்னோடு யாரும்
முகம் கொடுத்துப் பேசுவதில்லை
என்பதை தலைகுனிந்து,
கண்கள் குளமாக
அவனிடம் சொல்லிகொண்டிருந்தான் ...
இவன் ,

இடக்கை
அவனை அறியாமல்
வனைத் தேற்றியது...
வலக்கை
வன் அறியாமல்
சட்டைப்பை பணத்தை
தொட்டுப் பார்த்தது ..

___________________________________________________________________

புதன், 21 ஏப்ரல், 2010

குறுந்தகட்டுக்கிறுக்கல்கள்-4
`````````````````````````````````````````````````````````````````
னிமேல்
தேர்வு சமயங்களில்
உனது புத்தகங்களை
நான் இரவல் வாங்கமாட்டேன்....

பின்னென்ன..
இரண்டு நாட்களா
உன் பெயர் பொறித்த
முதல்
பக்கத்தையே நான்
வெறித்துக் கொண்டு இருந்தால்
மற்ற பக்கங்களை எப்போ
முடிப்பதாம்..
`````````````````````````````````````````````````````````````````

வெள்ளி, 16 ஏப்ரல், 2010

வேலை தேடும் வேலை(ளை)யில் ...மூடிய கண்களின் மேல்
சிவப்பாய் ஏதோ தெரிய..
விழித்துப் பார்த்தால்
அன்றைய தினம்
என்னை எழுப்ப வந்த
நண்பன் சூரியன்....

எழுந்து பார்த்தால்
சமையலறையில்
மூன்று வேளைச் சோறு மட்டும்
என்னைப் பார்த்துப்
பல்லிளிக்கிறது ...

வயிற்றுக்கு உணவு செல்லாத
நிறைய வேளைகளில்
செவிக்கு உணவு தந்தன
ஊர் நூலகமும்,
உலவு மையங்களும்,

சில சமயங்களில்
சும்மா என்கிற
சாதாரண வார்த்தையை
எடுத்து கூர்தீட்டிக்
குத்திக் காட்டினார்கள்
சுற்றத்தார்கள்....

யாருமற்ற பகல்கள் மட்டும்
மெதுவாக இரவை நோக்கி
கர்ந்தது

யாவரும் உள்ள இரவுகளோ
வேகமாக விடியலை நோக்கிச்
சென்றது...

பிறகு,
மூடிய கண்களின் மேல்
சிவப்பாய் ஏதோ தெரிய....
............................................

திங்கள், 29 மார்ச், 2010

கோலக்கால கோலாகலம்~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1. மார்கழி மாதத்தில்,
தினமும் அதிகாலை,
5லிருந்து 6 மணி வரை ,
காணத் தவறியதில்லை,
உன் கோலங்கள்....
என் மொட்டை மாடித்
தொலைவுக் காட்சியில்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
2. பூகோளத்தை ஆய்வு செய்யும்
தொழில் என்னுடையது..
சில சமயங்களில்
பூக்கோலத்தையும் ஆய்வு செய்ய
வைக்கிறாய்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
3. அரிசி மாவெடுத்து
நீ வாசலுக்கு வந்ததும்..
அரசிதான் மாவெடுத்து
வந்ததாய் எண்ணி
வரிசையில் வந்து
நிற்கின்றன
இந்த எறும்புகள்....
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
4. வாசலில் மட்டுமின்றி
உள்ளங்கையில் கூட
அழகாகக் கோலமிடக்
கற்று வைத்திருக்கிறாய்..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
5. எந்தக் கோலத்தில் உன்னைப்
பார்த்தாலும்
அழகாகவே தெரிகிறாய்.
குறிப்பாக,
அந்தக் கோலம் போடும்
கோலத்தில் மட்டும்
கொள்ளை அழகு...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

புதன், 17 மார்ச், 2010

குறுந்தகட்டுக்கிறுக்கல்கள்-3
<><><><><><><><><><><><><><>

ஒரு மாத காலமாக
தேர்வுக்குப் படித்தவற்றை
இப்படியா
ஒரு நொடியில்
மறக்கடிப்பாய்...

தேர்வறை முன்பு
ஆல் தி பெஸ்ட்
என்று சொல்லி...

<><><><><><><><><><><><><><>

உன் பேச்சும்
சிரிப்பும்
எப்போதும்
எதிரொலிப்பதே இல்லை...
தடைகளில் பட்டுத்
திரும்பினால் சரி..
தடைகளே விரும்பி
வைத்துக்கொண்டால் ?....

<><><><><><><><><><><><><><>

வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

பவானி சாகர் அணை

1. அணையின் அளவீடுகள்..(நல்ல caption உடன்...)
2. மாலை நேர வானவில்...அணைப் பூங்கா.
3. அணைப் பூங்கா
4. பவானி ஆற்றின் தொடக்கம்...
5. அணையின் ஒரு பகுதி
6.மறுபக்கம்.
7. அணையின் முகப்பு..
8. நட்புக்கா

திங்கள், 15 பிப்ரவரி, 2010

வெட்கம்-வரையறை.1. நான் பார்க்கும் போதெல்லாம்
உன் உண்மையான முகத்தை
அடிக்கடி வந்து
மறைத்துக் கொள்வதே...
இந்த வெட்கத்தின் வேலை...

2. தரை உரசும்
உன் கால் பெருவிரல்..
பற்களை மறைத்துப்
புன்னகைக்கும் உன் இதழ்..
கையில் சிக்கிய காகிதத்தை
துளித்துளியாய் பிய்த்து எறியும்
உன் கை விரல்கள்..
நான் பார்க்காத தருணங்களில்
என்னை பார்க்கும் கண்கள்...
மென்மையான சிரிப்பிலும்
குழி விழும் கன்னம்...
இவற்றில் எங்கு ஒளித்து வைத்திருக்கிறாய்?
உன் வெட்கத்தை..

(வெளிவராமல் போன கவிதை..)
3.உன் வீட்டுக்கு
நான் வரவேண்டுமெனில்,
நீ வெட்கத்தை எல்லாம்
மூட்டை கட்டிவிட்டு
தோழி வேடம் ஏற்க வேண்டும்..
அப்போது
நீ மூட்டை கட்டும் வெட்கங்களை
கொஞ்சம் கவனமாகப் பார்த்துக்கொள்...
சில சமயங்களில் தப்பிச்சென்று
உன் தங்கை முகத்தில்
ஒட்டிக்கொள்கிறது....

திங்கள், 1 பிப்ரவரி, 2010

ஜன்னல் குறிப்புகள்# உன் முகத்தை
முதலில் எனக்கு
அறிமுகம் செய்தது
ஜன்னல்....

# தொலை தூரப்
பேருந்துப் பயணங்களில்
நீ என்னை விட
அதிகம் நேசிப்பது
ஜன்னலை..

# பேருந்தில் நீ
ஜன்னலோரம்
அமரும்போதெல்லாம்
என் கால்கள்
அனிச்சையாய்
சாலையோரம் வந்துவிடுகிறது..

# உனக்கு பிடிக்காத
புடவைகள் மட்டும்
ஜன்னலுக்குப் பிடிக்கிறது..
ஜன்னல் திரையாய்

# உனக்கு பிடித்த
புடவைகள் மட்டும்
ஜன்னலுக்குப் பிடிப்பதில்லை..
ஜன்னலையொட்டி நீ
நடக்கையில் கம்பியில்
பட்டு கிழித்துவிடுகிறது

# நான் உனக்கு
அளித்த கவிதைகளை விட
ஜன்னலுக்கு அளித்த(எறிந்த)
கவிதைகளே
அதிகம்...

வெள்ளி, 29 ஜனவரி, 2010

வலைச்சரத்தில்....<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>
ஜனவரி-11 , அன்று வலைச்சரத்தில் இரும்புத்திரை என்னை அறிமுகம் செய்திருந்தார்.


<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>
நன்றிகளுடன்,
மாரிமுத்து


ஞாயிறு, 24 ஜனவரி, 2010

மறந்து விடாமல்...

ஜன்னலோர
இருக்கையில்
அமர்ந்தபின்னும்
கவனம் வெளியே
சிதறாமல் இருந்தது அன்று...

கையில் திணிக்கப்பட்ட
பயணச்சீட்டின் பின்புறம்
எழுதியிருந்த
மீதிச் சில்லறை....

வியாழன், 21 ஜனவரி, 2010

இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக...


----------------------------------------------------------------------------------------------------------------------------------
படம்: தமிழ்படம்.
இசை: கண்ணன்.
பாடலாசிரியர்:சந்துரு, அமுதன்
பாடியவர்கள் : ஹரிஹரன், ஸ்வேதா மோகன்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
ஓமகசீயா ஓஹோமகசீயா...
நாக்க முக்க நாக்கா
ஒ ஷக்கலாக்கா
ஓஹோ ரண்டக்கா...
உல்லாஹி உல் லாஹி
ஆய கயாஹி யாஹி...
மேஹூ மேஹூ
டைலாமோ டைலாமோ
ரேஹத்துல்லா சோனாலியோ...

சாம்ப சம்பாலே உசூசே
சாயோ சாயோ
ஹசிலீ பிசிலீ இலாஹி
யப்பாஞ்சிப்பா
டைலாமோ டைலாமோ
பல்லேலக்கா...(நாக்க முக்க..)

ஏ சல சாலா இசக்குபராரா
ஒசக்குமுறாயா
பூம்பூம்சகாக்கா
முக்காலா மையா மையா..
லாலாக்கு லாலாக்கு
டோல் டப்பி மா...(நாக்க முக்க..)

செவ்வாய், 19 ஜனவரி, 2010

சூரிய கிரகணம்

The pin hole projection method மூலம் கங்கண (annulur) சூரிய கிரகணத்தைக் கண்டு களித்தேன்...
எங்கள் வீட்டு மொட்டை மாடியில் வேயப்பட்டிருந்த தென்னங்கீற்றுக் கூரையின் வழியே தரையில் விழுந்த பிம்பங்கள் இதோ....