• முகப்பு
  • .
  • .
  • .
  • .

வெள்ளி, 30 செப்டம்பர், 2011

குறுவறைக்கிறுக்கல்கள்






(குறுவறை --> Cubicle )

--------------------------------------------------
நீ
அடிக்கடி
என்னைப் பார்க்கிறாய்,
அடிக்கடி
நேரம் பார்க்கிறாய்,
என் இதயம் 
ஒரு நொடி நின்றபின்பு
துடிக்கத் தொடங்குகிறது,
உன் கடிகாரம்
சில நொடிகள் தாமதமாய் 
ஓடுகின்ற 
காரணம் புரிகிறது.



என் 
இதயத்திலும்
நான்கு குறு அறைகள் உண்டு.
நான்கிலும்
கணினிக்கு பதிலாய்
கனி நீ.



நீ தட்டும் போது மட்டும்
இசைப்பலகையாய்
மாறிவிடுகிறது, 
விசைப்பலகை.



உன்னால் மட்டும் தான்
இப்படி
தினமும்
ஒரே சொல்லில்
கவிதை எழுதிச் செல்ல முடியும்.
வருகைப் பதிவேட்டில் 
கையொப்பம். 



தேநீர் இடைவேளைகளில்,
உன் கோப்பையிலிருந்து
தேநீர் பருகும் 
உதடு.
உன் உதட்டிலிருந்து
தேநீர் பருகும் 
கோப்பை.
------------------------------------------------

5 நினைவலைகள்:

LazySystemAdmin சொன்னது…

// நீ தட்டும் போது மட்டும்
இசைப்பலகையாய்
மாறிவிடுகிறது,
விசைப்பலகை.//

// தேநீர் இடைவேளைகளில்,
உன் கோப்பையிலிருந்து
தேநீர் பருகும்
உதடு.
உன் உதட்டிலிருந்து
தேநீர் பருகும்
கோப்பை. //

சூப்பர் மாரி... மிக அருமை... கலக்கு..

Marimuthu Murugan சொன்னது…

நன்றி பார்த்தி!!
எனக்கும் இவை இரண்டும் தான் பிடித்தது.

மீதி எல்லாம் உள்ளலாயீ..

Prabu Sadasivam சொன்னது…

உன்னுடைய கல்யாணத்துக்கு பிறகு அந்த கோப்பைக்கு கிடைக்குமா தேநீர் பருகும் பாக்கியம்.....

Prakash சொன்னது…

மிக அருமை நண்பா யார் அந்த பெண் தான் என்று கேட்கிறேன்.....

Marimuthu Murugan சொன்னது…

@பிரபு

//உன்னுடைய கல்யாணத்துக்கு பிறகு அந்த கோப்பைக்கு கிடைக்குமா தேநீர் பருகும் பாக்கியம்//

சான்சே இல்லே..

@பிரகாஷ்

//மிக அருமை நண்பா யார் அந்த பெண் தான் என்று கேட்கிறேன்.....//

இனிமேல் தான் தேட வேண்டும் நண்பா!!!

நன்றி