• முகப்பு
  • .
  • .
  • .
  • .

வியாழன், 24 டிசம்பர், 2009

யாரிவன்?....



ஒரு சுய சேவை சிற்றுண்டி
உணவகத்தில்,
தேவையான உணவினைத் தாங்களே
வாங்கிக்கொள்ள வேண்டும் என்பது
தெரியாதது போலவும் ,
கால் மேல் கால் போட்டுக்கொண்டும்,
சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டும்,
காத்துக் கொண்டும் இருந்த
அந்த பெண்ணைப் பார்க்க
பாவமாய் இருந்ததால்,
அருகில் சென்று
"இங்கு பணியாட்கள் இல்லை"
என்ற பலகையை நான் சுட்டிக்காட்ட,
உடனே அவள்,
யார் சொன்னது என்பதுபோல
ஒரு நமட்டுச் சிரிப்போடு
வேறு திசையில் கை காட்ட,
அங்கே
வேர்த்து விறுவிறுத்து
உணவினை எடுத்துக்கொண்டு
இருகைகளிலும் தூக்க முடியாமல்
செயற்கைச் சிரிப்புடன்
அவளை நோக்கி நடந்து
வந்தவனைப் பார்த்தவுடன்
தெரிந்து கொண்டேன்.
அவளின் கணவனாக
இருக்குமென்று.....
-----------------------------------------------------------------------------------------------------------------------------
சுயசேவை உணவகம் - self service hotel
-----------------------------------------------------------------------------------------------------------------------------

வெள்ளி, 18 டிசம்பர், 2009

மின்கவிதை..

லைப்பதிவில்
கவிதையொன்றை
எழுத முயன்றுகொண்டிருந்தான்..

ட்டென மின்னரட்டையில்
வந்தார், அமெரிக்க மேலாளர்..
What is the status Mr.? என்றார்...

பட பட வென்று கைகள்
பதிலளிக்கத் தொடங்கின..

The
Development
activity
is
going
on Sir ....

புதன், 16 டிசம்பர், 2009

சட்டென ஒட்டிக்கொண்ட பாடல்...

--------------------------------------------------------------------------------------------------------------------------------------
படம்: கந்தக்கோட்டை.
இசை: தீனா.
பாடலாசிரியர்:விவேகா
பாடியவர்: நகுலன்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

Drag from here

இரு சக்கரவாகனமாக அவளது விழிகள்

விபத்தாகி விழுந்தது ஏனோ எனதிரு விழிகள்


அவள் புருவத்தை சாய்த்துப் பார்க்கவில்லை

புன்னகையில் ஒரு மாற்றமில்லை

கால் விரலால் நிலம் தோண்டவில்லை

கடந்தபின் திரும்பி சிரிக்கவுமில்லை

எப்படி என்னுள் காதல் வந்தது

எப்படி என்னுள் காதல் வந்தது


எச்சில் உணவு கொடுக்கவில்லை

எனக்காய் இரவில் விழிக்கவில்லை

பார்த்ததும் ஆடை திருத்தவில்லை

பாஷையில் முனைகளை சேர்க்கவுமில்லை

எப்படி என்னுள் காதல் வந்தது

எப்படி என்னுள் காதல் வந்தது


என்னைப் பார்த்ததும் குழந்தையைத் தூக்கி முத்தம் கொடுக்கவில்லை

என் பேர் கேட்டதும் கன்னங்கள் இரண்டும் சிவந்துப்போகவில்லை

என் தெருவில் அவள் அடிக்கடி தினுசாய் திரிந்து பார்த்ததில்லை

என்னிடம் எதுவும் பிடித்ததுபோல புகழ்ந்து உரைத்ததில்லை

ஆனாலும் …. ஆனாலும் … ஆனாலும் . .

எப்படி என்னுள் காதல் வந்தது

அதை என்னிடமே தான் கேட்கத்தோணுது


என்னிடம் உள்ள கெட்டப்பழக்கத்தை தட்டி கேட்டதில்லை

சாப்பிடும்போது அவளை நினைத்து நான் தும்மல் போட்டதில்லை

அவள் கனவில் நானும் வந்து போனதாய் எந்தச் சுவடுமில்லை

ஒரு நாள் கூட நள்ளிரவில் குறுஞ்செய்தி வந்ததில்லை

ஆனாலும் …. ஆனாலும் … ஆனாலும் . ...

எப்படி என்னுள் காதல் வந்தது

அதை எப்படி நான் போய் சொல்வது

[அவள் புருவத்தை ...]

Stop Dragging

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

திங்கள், 14 டிசம்பர், 2009

கலைத்தல்....






டல் நுரைகள் மட்டும்
கண்ணுக்குப் புலப்படும்
ஓர் அதிகாலை நேரத்தில்,

நாலா பக்கமும்
ஓர் அரையிருள் வெறித்த
கடலோர மணலில்,

டக்கி வைத்திருந்த காலை
நீட்ட முடியாமலும் ,

ள் சென்ற உப்புக்
காற்றை சுவாசிக்க
முடியாமலும் ,

நிசப்தத்தை கிழித்துவிட்டு
எழும் கடலலையின்
சீற்றத்தால் வந்த
பயத்தை போக்க முடியாமலும் ,

வ்விடத்தை விட்டு
அகல நினைத்தவனின்
இடுப்பு வரை
உப்பு நீர் சூழ ,

ணர்விழந்து போன
கால்களால்
நிலை தடுமாறி
நீருக்குள் அமிழ ,

நுரையீரல் நுண்ணறைகளை
நீர் ஆக்ரமிக்க ,

மூச்சுத் திணறி
சாகத் திரிந்தவன் ,
சட்டென எழுந்தான் ....

முகத்தில் மூடிய
போர்வையை தூக்கி
எறிவதற்காகவும் ,
குறுக்கிய கால்களை
வேகமாய் நீட்டுவதற்காகவும் ,
ஈரமான ஆடையை
மாற்றுவதற்காகவும்.....
--------------------------------------------------------------------

திங்கள், 7 டிசம்பர், 2009

பிறந்தநாள் பரிசு


------------------------------------------------------------------------------------------------
வெற்றிலையை எடுத்து
காம்பைக் கிள்ளி
கையில் வைத்துக்கொண்டு
என்னைத் தேடிய அமத்தா..

ழுகின்ற என்னைத் தேற்ற
அம்மாவிடம் பொய்யாய் அடிவாங்கி
பொய்யாய் அழுது என்னை
சிரிக்க வைத்த அண்ணா....

நான் கழற்றி வைத்த
சட்டைப் பையில்
பீடிக்கும் டீக்கும் உரிமையோடு
காசு துழாவும் அப்பா....

யிறு எவ்வளவு வளர்ந்தாலும்
ஏண்டா இளைச்சுட்டேன்னு
கூசாமல் கேட்கும் அம்மா...

நீங்கள் எல்லாம் என்னை
வழியனுப்பிவிட்டு திரும்பும்போது
எனக்குத் தெரியாமல்
உங்கள் கண்களில் இருந்து
வந்த ஒரு சொட்டு
கண்ணீர்த்துளியில் இருந்து
எடுத்துக்கொண்டேன்

ன் பிறந்தநாள் பரிசை..
-------------------------------------------------------------------------------------------------