வெள்ளி, 29 ஜனவரி, 2010
வலைச்சரத்தில்....
<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>
ஜனவரி-11 , அன்று வலைச்சரத்தில் இரும்புத்திரை என்னை அறிமுகம் செய்திருந்தார்.<><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><><>
நன்றிகளுடன்,
மாரிமுத்து
எழுத்து: Marimuthu Murugan at 6:43 PM 0 நினைவலைகள்
தொகுப்பு: சுயபுராணம், FYI
ஞாயிறு, 24 ஜனவரி, 2010
மறந்து விடாமல்...
ஜன்னலோர
இருக்கையில்
அமர்ந்தபின்னும்
கவனம் வெளியே
சிதறாமல் இருந்தது அன்று...
கையில் திணிக்கப்பட்ட
பயணச்சீட்டின் பின்புறம்
எழுதியிருந்த
மீதிச் சில்லறை....
எழுத்து: Marimuthu Murugan at 10:17 AM 10 நினைவலைகள்
வியாழன், 21 ஜனவரி, 2010
இடஞ்சுட்டிப் பொருள் விளக்கம் தருக...
----------------------------------------------------------------------------------------------------------------------------------
படம்: தமிழ்படம்.
இசை: கண்ணன்.
பாடலாசிரியர்:சந்துரு, அமுதன்
பாடியவர்கள் : ஹரிஹரன், ஸ்வேதா மோகன்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
ஓமகசீயா ஓஹோமகசீயா...
நாக்க முக்க நாக்கா
ஒ ஷக்கலாக்கா
ஓஹோ ரண்டக்கா...
உல்லாஹி உல் லாஹி
ஆய கயாஹி யாஹி...
மேஹூ மேஹூ
டைலாமோ டைலாமோ
ரேஹத்துல்லா சோனாலியோ...
சாம்ப சம்பாலே உசூசே
சாயோ சாயோ
ஹசிலீ பிசிலீ இலாஹி
யப்பாஞ்சிப்பா
டைலாமோ டைலாமோ
பல்லேலக்கா...(நாக்க முக்க..)
ஏ சல சாலா இசக்குபராரா
ஒசக்குமுறாயா
பூம்பூம்சகாக்கா
முக்காலா மையா மையா..
லாலாக்கு லாலாக்கு
டோல் டப்பி மா...(நாக்க முக்க..)
எழுத்து: Marimuthu Murugan at 9:29 AM 4 நினைவலைகள்
தொகுப்பு: (பைத்தியம்)பிடித்த பாடல், பிடித்த பாடல்
செவ்வாய், 19 ஜனவரி, 2010
சூரிய கிரகணம்
The pin hole projection method மூலம் கங்கண (annulur) சூரிய கிரகணத்தைக் கண்டு களித்தேன்...
எங்கள் வீட்டு மொட்டை மாடியில் வேயப்பட்டிருந்த தென்னங்கீற்றுக் கூரையின் வழியே தரையில் விழுந்த பிம்பங்கள் இதோ....










எழுத்து: Marimuthu Murugan at 1:13 PM 4 நினைவலைகள்
தொகுப்பு: அனுபவம், சூரிய கிரகணம், படங்கள்
திங்கள், 11 ஜனவரி, 2010
சிட்டாளு...

கையில எடுத்துட்டு
கெளம்பிடுவ நெல் அறுக்க,
முறுக்கு தின்ன ஒருவா
பொஸ்தகப்பையில வச்சிட்டு..
சோத்துப் போசியில
நான் சுடுசோத்தப் போட்டுட்டு
பொட்டி தேப்பேன் எஞ்சட்டய,
பள்ளிகோடம் போறதுக்கு,
என் புதுசட்டயில பிச்செறிஞ்ச
குண்டூசிக் கம்பியெல்லாம்
நாம்பாத்தேன்
உன்செருப்பு வாரு மேல....
மழைத்தண்ணிய நான் பாத்தேன்
ஊட்டுக்குள்ள ஒழுகுறப்போ
ஒங்கண்ணுல ..
நீ
மஞ்சக் காட்டுல பூடு பறிச்சு
மாட்டுக் கொட்டாயில சாணி வழிச்சு
கரும்புத்தோகையுரிச்சு
நடவு நட்டி
நான் முழுசா
எட்டாங்கிளாஸ் படிக்கறதுக்குள்ள
பாதியாய் சுருங்கிப்போனே.
போதுமாத்தா நாம்படிச்சது
போகாதே இதுக்கப்புறம் வேலைக்கு,
கால் வயிறு
தின்னாலும் உங்கையாலே
திங்க வேணும்....
இப்ப நாஞ்சிட்டாளு
நாளைக்கு எனக்கு
கீழ எட்டாளு
சாமி மேல சத்தியமா
எனக்கு எந்த வெசனமுமில்ல,
பள்ளிக்கோட புள்ளைகளெல்லாம்
என்னைத்தாண்டி போகுறப்ப
கண்ணு மட்டும் துளிவேள
கலங்கிடும்...
சித்த நேரத்துல
தெளிஞ்சுடும்......
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
(உரையாடல் அமைப்பு நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது )
-----------------------------------------------------------------------------------------------------------
எழுத்து: Marimuthu Murugan at 10:28 PM 11 நினைவலைகள்
தொகுப்பு: அனுபவம், உரையாடல் போட்டிக் கவிதை, ஏழ்மை, கவிதை
ஞாயிறு, 10 ஜனவரி, 2010
குறுந்தகட்டுக்கிறுக்கல்கள்-2
எழுத்து: Marimuthu Murugan at 10:35 AM 4 நினைவலைகள்
தொகுப்பு: ♥♥♥, அனுபவம், கல்லூரி நினைவுகள், கவிதை, குறுந்தகட்டுக்கிறுக்கல்கள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)