
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கடைசி நேரத்தில் வந்துகாற்றில் வரைந்து
சொல்லிவிட்டுப் போனாய்.
பிளெமிங் இடக்கை மற்று வலக்கை
விதிகளை..
நானும்
நீ சொன்னதை
பிழையின்றித் தேர்வில்
எழுதி விட்டு வந்தேன்..
இடக்கை விதியை
வலக்கை விதி என்றும்
வலக்கை விதியை
இடக்கை விதி என்றும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~