• முகப்பு
  • .
  • .
  • .
  • .

புதன், 14 ஆகஸ்ட், 2013

மழைக்கு ஒதுங்கும் கவிதை





மழையில் நனைந்த என்னை
வீட்டிற்கு வெளியே 
நிற்க வைத்து முறைப்பாய்.

கோபத்தில் கடிந்துகொள்வாய்,
என்னையும் மழையையும்.

ஈரமான கைகளில் 
தேநீர் தருவாய், சூடாக.

அடுத்த நாளிலிருந்து 
குடை எடுத்து செல்ல 
மறக்காமல் நினைவூட்டுவாய்.

இவற்றிற்காக மட்டும்
நான் மழையில் நனைவதில்லை.

நீ
கூந்தல் உலர்த்திய
ஈரத் துண்டால் 
தலை துவட்டி விடுவாயே,
அதற்காகவும் தான் 

வெள்ளி, 30 செப்டம்பர், 2011

குறுவறைக்கிறுக்கல்கள்






(குறுவறை --> Cubicle )

--------------------------------------------------
நீ
அடிக்கடி
என்னைப் பார்க்கிறாய்,
அடிக்கடி
நேரம் பார்க்கிறாய்,
என் இதயம் 
ஒரு நொடி நின்றபின்பு
துடிக்கத் தொடங்குகிறது,
உன் கடிகாரம்
சில நொடிகள் தாமதமாய் 
ஓடுகின்ற 
காரணம் புரிகிறது.



என் 
இதயத்திலும்
நான்கு குறு அறைகள் உண்டு.
நான்கிலும்
கணினிக்கு பதிலாய்
கனி நீ.



நீ தட்டும் போது மட்டும்
இசைப்பலகையாய்
மாறிவிடுகிறது, 
விசைப்பலகை.



உன்னால் மட்டும் தான்
இப்படி
தினமும்
ஒரே சொல்லில்
கவிதை எழுதிச் செல்ல முடியும்.
வருகைப் பதிவேட்டில் 
கையொப்பம். 



தேநீர் இடைவேளைகளில்,
உன் கோப்பையிலிருந்து
தேநீர் பருகும் 
உதடு.
உன் உதட்டிலிருந்து
தேநீர் பருகும் 
கோப்பை.
------------------------------------------------

வியாழன், 24 பிப்ரவரி, 2011

♥ கவிதைக்கூடம் ♥





,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

♥ஆய்வகத்துக்குள்

நுழையும் முன்பே,

ஆய்வு செய்யத்

துவங்கிவிட்டேன்.

உன்னை.



♥ என்னருகில் வந்து

திருகு அளவியின் புரியிடைத்தூரம் பற்றி

கேட்கிறாய்.

எனக்குத் தெரிந்தது எல்லாம்

வெறும் 'இடை'த்தூரம்தான்.



♥உன் கன்னக் குழியாடியின் மேல்,

என் முத்தங்களின் குவியதூரம் எவ்வளவு?.



♥ ஊசலின் அலைவு நேரத்தைக் கவனிக்கும் நீ

ஊசலாடும் என் இதயத்தையும் கொஞ்சம் கவனி.



♥தவறாமல்

தவறான திசையையே

காட்டுகிறது.

காந்த மானி.

உன் காந்தக் கண்களை

வேறு பக்கமாய்த் திருப்பு.

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

வியாழன், 7 அக்டோபர், 2010

கவிதை விதை விதைத்தவள்..



`````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````
. ஒரே ஒரு விதைதான்
நீ விதைத்தாய்.
கணக்கற்ற கவிதைகள்
முளைக்கின்றன
என்னுள்..

. உன் சேலையின் நீளத்திற்கொரு
கவிதை இயற்றினேன்..
தலைப்பு மட்டும் கிடைக்கவில்லை.
கொஞ்சம் கொடேன்.
உன் சேலைத் தலைப்பை...

. இவ்வளவு அழகாக
கவிதை எழுதிப் போகிறாய்.
திசுத்தாளில் உதட்டுச்சாயம்..

. நான் என்ன எழுதினாலும்
அது கிறுக்கலாய் முடிகிறது.
நீ என்ன கிறுக்கினாலும்
அது கவிதையாய் முடிகிறது..

௫. நீ எப்போதும்
என்னுடன் இருக்க வேண்டும்.
நான் கவிதை எழுதும் நேரம் தவிர.

நீ அருகே இருந்தால்
எனக்கு பேச்சே வராது.
கவிதை மட்டும் எப்படி வரும்?.

. உன் பிறந்தநாளில்
நான் எழுதிய கவிதையொன்று..
" பூமியில் வாழும் நிலவொன்று
இருபத்து மூன்றாவது முறை
சூரியனைச் சுற்ற கிளம்பிய தினம்"
``````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````

வெள்ளி, 23 ஜூலை, 2010

நீ - மழை நேர மழலையடி



xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
ரம் சேகரித்து வைத்த
மழைத்துளிகளால்
நீ நனைந்து
சிலிர்ப்பதைக் காண
காத்திருக்கிறேன்.
மரத்தடியில் ...

நீ மரத்தருகே
வருவதைக் கண்டதுமே
சிலிர்த்தது என்னவோ
மரம்...

நனைந்தது
என்னவோ
நான் தான்...
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
ன்னை போலவே தான்
எனக்கும்,
மழை நின்ற பின்
யூகலிப்டஸ் மரச்சாலையில்
நடந்து செல்லப் பிடிக்கும்.

உன்னை போலவே தான்
எனக்கும்,
மழை வரும் போது
காகிதக் கப்பல் செய்து
விளையாடும்
மழை நேர மழலையாய்
மாறப் பிடிக்கும்...

உன்னை போலவே தான்
எனக்கும்,
மழை நேரத்தில்
சாலையைக் கடந்த
தவளைகளைப் பிடிக்காது...

ஆனால்
இடி மின்னலோடு
மழை பெய்கையில் மட்டும்,
உன்னைப் போல
காதைப் பொத்தி
"அர்ஜுனா அர்ஜுனா"
என்று நான் கூறுவதில்லை...

மாறாக,
உன் பெயரைத்தான்
உரக்கக் கத்துவேன்....
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

வியாழன், 1 ஜூலை, 2010

பாத்திரங்கள்..


.........................................................................................................
பாத்திரங்களையெல்லாம்
சுத்தம் செய்து வைக்கும்
பாத்திரமாக
அக்கா ..

சாப்பிட்ட பாத்திரங்களைக் கூட
கழுவாமல்
அப்படியே எறிந்துவிட்டுச்
செல்லும் பாத்திரம்
நான்...

வ்வளவு கஷ்டத்திலும்
வீட்டுப் பாத்திரங்களில்
உணவுக்கு குறை இன்றி
குடும்பத்தை காக்கும்
பாத்திரமாய் அப்பா...

ழை வரும் போது
வீட்டில் ஒழுகும் இடங்களில்
ஓடிச் சென்று
பாத்திரங்களை வைக்கும்
பாத்திரம்
அம்மா ...
........................................................................................................

செவ்வாய், 15 ஜூன், 2010

குறுந்தகட்டுக்கிறுக்கல்கள்-5



Thanks to flickr.com
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கடைசி நேரத்தில் வந்து
காற்றில் வரைந்து
சொல்லிவிட்டுப் போனாய்.
பிளெமிங் இடக்கை மற்று வலக்கை
விதிகளை..

நானும்
நீ சொன்னதை
பிழையின்றித் தேர்வில்
எழுதி விட்டு வந்தேன்..
இடக்கை விதியை
வலக்கை விதி என்றும்
வலக்கை விதியை
இடக்கை விதி என்றும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வியாழன், 20 மே, 2010

முகநக நட்பாம்...



___________________________________________________________________

வீட்டில் பணத்தைத் திருடியதால்
தன்னோடு யாரும்
முகம் கொடுத்துப் பேசுவதில்லை
என்பதை தலைகுனிந்து,
கண்கள் குளமாக
அவனிடம் சொல்லிகொண்டிருந்தான் ...
இவன் ,

இடக்கை
அவனை அறியாமல்
வனைத் தேற்றியது...
வலக்கை
வன் அறியாமல்
சட்டைப்பை பணத்தை
தொட்டுப் பார்த்தது ..

___________________________________________________________________

புதன், 21 ஏப்ரல், 2010

குறுந்தகட்டுக்கிறுக்கல்கள்-4




`````````````````````````````````````````````````````````````````
னிமேல்
தேர்வு சமயங்களில்
உனது புத்தகங்களை
நான் இரவல் வாங்கமாட்டேன்....

பின்னென்ன..
இரண்டு நாட்களா
உன் பெயர் பொறித்த
முதல்
பக்கத்தையே நான்
வெறித்துக் கொண்டு இருந்தால்
மற்ற பக்கங்களை எப்போ
முடிப்பதாம்..
`````````````````````````````````````````````````````````````````

வெள்ளி, 16 ஏப்ரல், 2010

வேலை தேடும் வேலை(ளை)யில் ...



மூடிய கண்களின் மேல்
சிவப்பாய் ஏதோ தெரிய..
விழித்துப் பார்த்தால்
அன்றைய தினம்
என்னை எழுப்ப வந்த
நண்பன் சூரியன்....

எழுந்து பார்த்தால்
சமையலறையில்
மூன்று வேளைச் சோறு மட்டும்
என்னைப் பார்த்துப்
பல்லிளிக்கிறது ...

வயிற்றுக்கு உணவு செல்லாத
நிறைய வேளைகளில்
செவிக்கு உணவு தந்தன
ஊர் நூலகமும்,
உலவு மையங்களும்,

சில சமயங்களில்
சும்மா என்கிற
சாதாரண வார்த்தையை
எடுத்து கூர்தீட்டிக்
குத்திக் காட்டினார்கள்
சுற்றத்தார்கள்....

யாருமற்ற பகல்கள் மட்டும்
மெதுவாக இரவை நோக்கி
கர்ந்தது

யாவரும் உள்ள இரவுகளோ
வேகமாக விடியலை நோக்கிச்
சென்றது...

பிறகு,
மூடிய கண்களின் மேல்
சிவப்பாய் ஏதோ தெரிய....
............................................

திங்கள், 29 மார்ச், 2010

கோலக்கால கோலாகலம்



~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1. மார்கழி மாதத்தில்,
தினமும் அதிகாலை,
5லிருந்து 6 மணி வரை ,
காணத் தவறியதில்லை,
உன் கோலங்கள்....
என் மொட்டை மாடித்
தொலைவுக் காட்சியில்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
2. பூகோளத்தை ஆய்வு செய்யும்
தொழில் என்னுடையது..
சில சமயங்களில்
பூக்கோலத்தையும் ஆய்வு செய்ய
வைக்கிறாய்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
3. அரிசி மாவெடுத்து
நீ வாசலுக்கு வந்ததும்..
அரசிதான் மாவெடுத்து
வந்ததாய் எண்ணி
வரிசையில் வந்து
நிற்கின்றன
இந்த எறும்புகள்....
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
4. வாசலில் மட்டுமின்றி
உள்ளங்கையில் கூட
அழகாகக் கோலமிடக்
கற்று வைத்திருக்கிறாய்..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
5. எந்தக் கோலத்தில் உன்னைப்
பார்த்தாலும்
அழகாகவே தெரிகிறாய்.
குறிப்பாக,
அந்தக் கோலம் போடும்
கோலத்தில் மட்டும்
கொள்ளை அழகு...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

புதன், 17 மார்ச், 2010

குறுந்தகட்டுக்கிறுக்கல்கள்-3




<><><><><><><><><><><><><><>

ஒரு மாத காலமாக
தேர்வுக்குப் படித்தவற்றை
இப்படியா
ஒரு நொடியில்
மறக்கடிப்பாய்...

தேர்வறை முன்பு
ஆல் தி பெஸ்ட்
என்று சொல்லி...

<><><><><><><><><><><><><><>

உன் பேச்சும்
சிரிப்பும்
எப்போதும்
எதிரொலிப்பதே இல்லை...
தடைகளில் பட்டுத்
திரும்பினால் சரி..
தடைகளே விரும்பி
வைத்துக்கொண்டால் ?....

<><><><><><><><><><><><><><>

வெள்ளி, 19 பிப்ரவரி, 2010

பவானி சாகர் அணை

1. அணையின் அளவீடுகள்..(நல்ல caption உடன்...)
2. மாலை நேர வானவில்...அணைப் பூங்கா.
3. அணைப் பூங்கா
4. பவானி ஆற்றின் தொடக்கம்...
5. அணையின் ஒரு பகுதி
6.மறுபக்கம்.
7. அணையின் முகப்பு..
8. நட்புக்கா