• முகப்பு
  • .
  • .
  • .
  • .

வியாழன், 24 பிப்ரவரி, 2011

♥ கவிதைக்கூடம் ♥

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

♥ஆய்வகத்துக்குள்

நுழையும் முன்பே,

ஆய்வு செய்யத்

துவங்கிவிட்டேன்.

உன்னை.♥ என்னருகில் வந்து

திருகு அளவியின் புரியிடைத்தூரம் பற்றி

கேட்கிறாய்.

எனக்குத் தெரிந்தது எல்லாம்

வெறும் 'இடை'த்தூரம்தான்.♥உன் கன்னக் குழியாடியின் மேல்,

என் முத்தங்களின் குவியதூரம் எவ்வளவு?.♥ ஊசலின் அலைவு நேரத்தைக் கவனிக்கும் நீ

ஊசலாடும் என் இதயத்தையும் கொஞ்சம் கவனி.♥தவறாமல்

தவறான திசையையே

காட்டுகிறது.

காந்த மானி.

உன் காந்தக் கண்களை

வேறு பக்கமாய்த் திருப்பு.

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,