• முகப்பு
  • .
  • .
  • .
  • .

திங்கள், 15 பிப்ரவரி, 2010

வெட்கம்-வரையறை.



1. நான் பார்க்கும் போதெல்லாம்
உன் உண்மையான முகத்தை
அடிக்கடி வந்து
மறைத்துக் கொள்வதே...
இந்த வெட்கத்தின் வேலை...

2. தரை உரசும்
உன் கால் பெருவிரல்..
பற்களை மறைத்துப்
புன்னகைக்கும் உன் இதழ்..
கையில் சிக்கிய காகிதத்தை
துளித்துளியாய் பிய்த்து எறியும்
உன் கை விரல்கள்..
நான் பார்க்காத தருணங்களில்
என்னை பார்க்கும் கண்கள்...
மென்மையான சிரிப்பிலும்
குழி விழும் கன்னம்...
இவற்றில் எங்கு ஒளித்து வைத்திருக்கிறாய்?
உன் வெட்கத்தை..

(வெளிவராமல் போன கவிதை..)
3.உன் வீட்டுக்கு
நான் வரவேண்டுமெனில்,
நீ வெட்கத்தை எல்லாம்
மூட்டை கட்டிவிட்டு
தோழி வேடம் ஏற்க வேண்டும்..
அப்போது
நீ மூட்டை கட்டும் வெட்கங்களை
கொஞ்சம் கவனமாகப் பார்த்துக்கொள்...
சில சமயங்களில் தப்பிச்சென்று
உன் தங்கை முகத்தில்
ஒட்டிக்கொள்கிறது....

2 நினைவலைகள்:

ஜெனோவா சொன்னது…

vaalthukkal nanbaa!! ;-)

Marimuthu Murugan சொன்னது…

நன்றி நண்பா