# உன் முகத்தை
முதலில் எனக்கு
அறிமுகம் செய்தது
ஜன்னல்....
முதலில் எனக்கு
அறிமுகம் செய்தது
ஜன்னல்....
# தொலை தூரப்
பேருந்துப் பயணங்களில்
நீ என்னை விட
அதிகம் நேசிப்பது
ஜன்னலை..
# பேருந்தில் நீ
ஜன்னலோரம்
அமரும்போதெல்லாம்
என் கால்கள்
அனிச்சையாய்
சாலையோரம் வந்துவிடுகிறது..
# உனக்கு பிடிக்காத
புடவைகள் மட்டும்
ஜன்னலுக்குப் பிடிக்கிறது..
ஜன்னல் திரையாய்
# உனக்கு பிடித்த
புடவைகள் மட்டும்
ஜன்னலுக்குப் பிடிப்பதில்லை..
ஜன்னலையொட்டி நீநடக்கையில் கம்பியில்
பட்டு கிழித்துவிடுகிறது
# நான் உனக்கு
அளித்த கவிதைகளை விட
ஜன்னலுக்கு அளித்த(எறிந்த)
கவிதைகளே
அதிகம்...
11 நினைவலைகள்:
நல்ல கவிதை நண்பரே...
வணக்கம் #தண்டோரா சார்...
உங்களின் முதல் வருகைக்கும் பதிலுக்கும் நன்றிங்க....
உங்கள் கவிதைகளுக்கு நானும் ஒரு ரசிகன்...
வீடுகளின் காதுகள் யன்னல் கதவுகள் காதலுக்கு மட்டும் கண்ணாக வாய்க்கிறது
கவிதை.. !!
:)
//வீடுகளின் காதுகள் யன்னல் கதவுகள் காதலுக்கு மட்டும் கண்ணாக வாய்க்கிறது//
கலக்கலா கவிதையாகவே பின்னூட்டம் போடுறீங்க சார்...
நன்றிங்க #நேசமித்ரன் சார்,,,
கடைசி ஐந்து வரிகளை மிகவும் ரசித்தேன் ! நடத்து நண்பா !;-)
சட்டென ஒட்டிக்கொள்கிறது ஜன்னல் சில குறிப்புகள். ரசனை கவிதை மாரி.
#ஜோ-
#அடலேறு -
ரசனைக்கு நன்றி நண்பர்களே .....நடத்துவோம்...
தென்றல் வீசும் யன்னல்..
super. jannal en ithayak kathavai thiranthathu.
//தென்றல் வீசும் யன்னல்.//
//super. jannal en ithayak kathavai thiranthathu.//
#சிவாஜி சங்கர்
#மதுரை சரவணன்
உங்கள் மறுமொழிகள் என் இதயக் கதவைத் திறந்து தென்றல் வீசிச் சென்றது..
நன்றிகள்....
:) அழகு ஜன்னல்
கருத்துரையிடுக