• முகப்பு
  • .
  • .
  • .
  • .

திங்கள், 29 மார்ச், 2010

கோலக்கால கோலாகலம்



~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1. மார்கழி மாதத்தில்,
தினமும் அதிகாலை,
5லிருந்து 6 மணி வரை ,
காணத் தவறியதில்லை,
உன் கோலங்கள்....
என் மொட்டை மாடித்
தொலைவுக் காட்சியில்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
2. பூகோளத்தை ஆய்வு செய்யும்
தொழில் என்னுடையது..
சில சமயங்களில்
பூக்கோலத்தையும் ஆய்வு செய்ய
வைக்கிறாய்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
3. அரிசி மாவெடுத்து
நீ வாசலுக்கு வந்ததும்..
அரசிதான் மாவெடுத்து
வந்ததாய் எண்ணி
வரிசையில் வந்து
நிற்கின்றன
இந்த எறும்புகள்....
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
4. வாசலில் மட்டுமின்றி
உள்ளங்கையில் கூட
அழகாகக் கோலமிடக்
கற்று வைத்திருக்கிறாய்..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
5. எந்தக் கோலத்தில் உன்னைப்
பார்த்தாலும்
அழகாகவே தெரிகிறாய்.
குறிப்பாக,
அந்தக் கோலம் போடும்
கோலத்தில் மட்டும்
கொள்ளை அழகு...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

8 நினைவலைகள்:

Marimuthu Murugan சொன்னது…

எப்படி யோசிச்சாலும் இப்படித்தான் எழுத வருது...

நேசமித்ரன் சொன்னது…

:)

மதுரை சரவணன் சொன்னது…

கவிதை கோலம் போடுகிறது. வாழ்த்துக்கள்

Marimuthu Murugan சொன்னது…

சிரிப்பி-க்கு நன்றிங்க நேசமித்ரன்
நன்றிங்க சரவணன்

Prakash சொன்னது…

மீண்டும் ஒரு சபாஷ்

Rajesh kumar சொன்னது…

டேய் மாரி.. என்னடா இது .. எப்பிடி இப்படியெல்லாம் எழுதுற ? ரொம்ப அருமை .. சீக்கிரம் சினிமாக்கு பாட்டெழுத போயிடுடா..

Marimuthu Murugan சொன்னது…

நன்றி பிரகாஷ் & ராஜேஷ்

//ரொம்ப அருமை .. சீக்கிரம் சினிமாக்கு பாட்டெழுத போயிடுடா//

...இவனுக்குள்ள என்னமோ இருந்துருக்கு பாரேன்.......

www.bogy.in சொன்னது…

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in