• முகப்பு
  • .
  • .
  • .
  • .

வியாழன், 1 ஜூலை, 2010

பாத்திரங்கள்..


.........................................................................................................
பாத்திரங்களையெல்லாம்
சுத்தம் செய்து வைக்கும்
பாத்திரமாக
அக்கா ..

சாப்பிட்ட பாத்திரங்களைக் கூட
கழுவாமல்
அப்படியே எறிந்துவிட்டுச்
செல்லும் பாத்திரம்
நான்...

வ்வளவு கஷ்டத்திலும்
வீட்டுப் பாத்திரங்களில்
உணவுக்கு குறை இன்றி
குடும்பத்தை காக்கும்
பாத்திரமாய் அப்பா...

ழை வரும் போது
வீட்டில் ஒழுகும் இடங்களில்
ஓடிச் சென்று
பாத்திரங்களை வைக்கும்
பாத்திரம்
அம்மா ...
........................................................................................................

9 நினைவலைகள்:

வால்பையன் சொன்னது…

"அட” போட வைக்கும் ஒரு சில கவிதைகளில் ஒன்று!

Parthiban Ponnusamy சொன்னது…

நீயும் நல்ல கவிதை பாத்திரம் மாரி.. கவிதை நல்லா இருக்கு.. வாழ்த்துக்கள்...

இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் உன்கிட்ட...

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…

அருமை ........

பொருத்தமான படம்

மாரி-முத்து சொன்னது…

அட!! அப்படியா...
நன்றிங்க வால் ....

//நீயும் நல்ல கவிதை பாத்திரம் மாரி//
இப்படி உசுப்பேத்தியே
உடம்பை ரணகளமாக்கும்
பாத்திரமாய் பார்த்தி ..
நன்றி நண்பா..

நன்றிங்க உலவு ..

Rajesh kumar சொன்னது…

அன்புள்ள மாரி.. சின்ன சின்னதாய் அருமையான படைப்புகள்.எளிமையும் எழிலும் மிளிர்கின்றன.வாழ்த்துக்கள்

மாரி-முத்து சொன்னது…

//அன்புள்ள மாரி.. சின்ன சின்னதாய் அருமையான படைப்புகள்.எளிமையும் எழிலும் மிளிர்கின்றன.வாழ்த்துக்கள்//

அன்பின் ராஜேஷ்..
உன் ரசனைக்கு என் நன்றிகள் நண்பா..

மாரி-முத்து சொன்னது…

பிளாக்கர் Error ஆல் அழிந்து போன மறுமொழிகள்..

Parthiban Ponnusamy:

நீயும் நல்ல கவிதை பாத்திரம் மாரி.. கவிதை நல்லா இருக்கு.. வாழ்த்துக்கள்...

இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன் உன்கிட்ட...


உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com):

அருமை ........

பொருத்தமான படம்

Prakash சொன்னது…

மிக அருமையான பாத்திரம் நீ

மாரி-முத்து சொன்னது…

நன்றி பிரகாஷ்...
நீயும் தான்..