• முகப்பு
  • .
  • .
  • .
  • .

திங்கள், 30 நவம்பர், 2009

பேருந்து தினம்ன்று பேருந்து தினம். ,
தேர்வைக்கூட கண்டுகொள்ளாமல்
கொண்டாட நினைத்த தினம்.....

நாயகி பேருந்துக்கு
காகிதப்பூ அலங்காரம்,
பூக்கடை நண்பன் தயவில்
ஒரு குறைந்த விலை
பேருந்துயர மாலை,
பிறகு என் கைவண்ணத்தில்
உருவான முப்பரிமாண
எழுத்துக்களாலான முகப்பு அட்டை....

நாயகனுக்கு ஒரே ஒரு,
வெள்ளைப் புத்தாடை.....

பேருக்கு, ஒரு கோவிலில்
பூஜை செய்த பின்,
"மன்மத ராசா" வின் இசையோடு
ஒத்திசைவாய் குலுங்கியபடி
நகர்ந்தது பேருந்து......

ங்கள் ஆட்டத்தை
ஒரு தமிழ் நாடு அரசு
கடுப்போடு வெறித்துவிட்டு
புகையை கக்கிக் கடந்து போக,
கடுப்பான நம் நாயகன்,
அதி வேகமாய் அரசைக் கடக்க முயல,
புகையில் தொடங்கியது
ஒரு பகைப் போட்டி...

போட்டியின் நடுவே ஒரு
பைக் குறுக்கே பாய
நாயகன் பயத்தில் ஓரங்கட்ட
நிலை தடுமாறிச் சாய்ந்தது
சாலையோரப்பள்ளத்தில்..

டிக்கொண்டு வந்த நாங்கள்,
அமைதியாய் வெளியேற முயல,
ஆடாமல் வந்த பெண்கள்
கூச்சலிட்டே வெளியே வர
வந்தமர்ந்தோம் சாலையோரம்...

யாருக்கும் உயிர்ச்சேதம்
இல்லையெனத் தெரிந்தபின்பு
தொடங்கியது மறுபடியும்
குத்தாட்டம் நடு ரோட்டில்...

யிர்பிழைத்ததற்காக அல்ல...
எங்களோடு பயணிக்காமலே
மடிந்து
போன அன்றைய
கணிதத்தேர்வுக்காக...
-------------------------------------------------------------------------------------------------
காதலை விட்டு வெளியே வந்து, என்னால் முடிந்த வரை "Enter " பட்டனைத் தட்டி தட்டி வடித்த வரிகள் இவை...குறையிருந்தாலும், நிறையிருந்தாலும் மறக்காமல் கருத்துரையில் தெரிவிக்கவும்..
-------------------------------------------------------------------------------------------------

7 நினைவலைகள்:

Parthi... சொன்னது…

மாரி, நல்லா இருக்குடா... வாழ்த்துக்கள் மச்சி...

ஜெனோவா சொன்னது…

மாரி, மிக மிக அழகான இயல்பானக் கவிதை !
தொடர்ந்து இந்த நடையில் எழுத முயற்சி செய் நண்பா !

வாழ்த்துக்கள்

முத்து சொன்னது…

ரொம்ப நன்றி பார்த்தி மற்றும் ஜோ..(இதே நடைதானே....கலக்கிடுவோம் நண்பா..)

அடலேறு சொன்னது…

கலக்கல் நண்பரே. கவிதை அருமை.

//எங்களோடு பயணிக்காமலே
மடிந்து போன அன்றைய
கணிதத்தேர்வுக்காக... //
மிக ரசித்தேன். வாழ்த்துக்கள்

முத்து சொன்னது…

கலக்கல் மறுமொழிக்கு மிக்க நன்றிங்க.... அடலேறு..

Prakash சொன்னது…

இயல்பான மொழிகளால் ஒரு நினைவலைகள்... தொடரட்டும் உன் பணி...

முத்து சொன்னது…

முதல் வருகைக்கும் பதிலுக்கும் நன்றி நண்பா...