• முகப்பு
  • .
  • .
  • .
  • .

வியாழன், 24 டிசம்பர், 2009

யாரிவன்?....ஒரு சுய சேவை சிற்றுண்டி
உணவகத்தில்,
தேவையான உணவினைத் தாங்களே
வாங்கிக்கொள்ள வேண்டும் என்பது
தெரியாதது போலவும் ,
கால் மேல் கால் போட்டுக்கொண்டும்,
சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டும்,
காத்துக் கொண்டும் இருந்த
அந்த பெண்ணைப் பார்க்க
பாவமாய் இருந்ததால்,
அருகில் சென்று
"இங்கு பணியாட்கள் இல்லை"
என்ற பலகையை நான் சுட்டிக்காட்ட,
உடனே அவள்,
யார் சொன்னது என்பதுபோல
ஒரு நமட்டுச் சிரிப்போடு
வேறு திசையில் கை காட்ட,
அங்கே
வேர்த்து விறுவிறுத்து
உணவினை எடுத்துக்கொண்டு
இருகைகளிலும் தூக்க முடியாமல்
செயற்கைச் சிரிப்புடன்
அவளை நோக்கி நடந்து
வந்தவனைப் பார்த்தவுடன்
தெரிந்து கொண்டேன்.
அவளின் கணவனாக
இருக்குமென்று.....
-----------------------------------------------------------------------------------------------------------------------------
சுயசேவை உணவகம் - self service hotel
-----------------------------------------------------------------------------------------------------------------------------

6 நினைவலைகள்:

Parthi... சொன்னது…

ஹஹஹா... நல்ல இருக்கு மச்சி...

மாரி-முத்து சொன்னது…

#பார்த்தி - தேங்க்ஸ் மச்சி...

இரசிகை சொன்னது…

:)

மாரி-முத்து சொன்னது…

ௐ ௐ ௐ ௐ ௐ ௐ ௐ
ௐ ௐ ௐ ௐ ௐ ௐ ௐ
ௐ ௐ
.....ௐ ௐ
ௐ ௐ
.....ௐ ௐ ௐ ௐ ௐ
ௐ ௐ
.....ௐ ௐ ௐ ௐ ௐ
ௐ ௐ
.....ௐ ௐ.....ௐ ௐ
.........................ௐ ௐ
............ௐ ௐ ௐ ௐ ௐ
............ௐ ௐ ௐ ௐ ௐ..ன்றிகள்
............ௐ ௐ

வால்பையன் சொன்னது…

பணியாளை குத்தகைக்கு எடுத்திருக்கார்ன்னு சொல்லுங்க!

மாரி-முத்து சொன்னது…

#வால்பையன் - ஆமாங்க...
முதல் மறுமொழிக்கு நன்றிகள்..