• முகப்பு
  • .
  • .
  • .
  • .

திங்கள், 14 டிசம்பர், 2009

கலைத்தல்....


டல் நுரைகள் மட்டும்
கண்ணுக்குப் புலப்படும்
ஓர் அதிகாலை நேரத்தில்,

நாலா பக்கமும்
ஓர் அரையிருள் வெறித்த
கடலோர மணலில்,

டக்கி வைத்திருந்த காலை
நீட்ட முடியாமலும் ,

ள் சென்ற உப்புக்
காற்றை சுவாசிக்க
முடியாமலும் ,

நிசப்தத்தை கிழித்துவிட்டு
எழும் கடலலையின்
சீற்றத்தால் வந்த
பயத்தை போக்க முடியாமலும் ,

வ்விடத்தை விட்டு
அகல நினைத்தவனின்
இடுப்பு வரை
உப்பு நீர் சூழ ,

ணர்விழந்து போன
கால்களால்
நிலை தடுமாறி
நீருக்குள் அமிழ ,

நுரையீரல் நுண்ணறைகளை
நீர் ஆக்ரமிக்க ,

மூச்சுத் திணறி
சாகத் திரிந்தவன் ,
சட்டென எழுந்தான் ....

முகத்தில் மூடிய
போர்வையை தூக்கி
எறிவதற்காகவும் ,
குறுக்கிய கால்களை
வேகமாய் நீட்டுவதற்காகவும் ,
ஈரமான ஆடையை
மாற்றுவதற்காகவும்.....
--------------------------------------------------------------------

10 நினைவலைகள்:

அட சொன்னது…

// ஈரமான ஆடையை
மாற்றுவதற்காகவும்// :-)

பளிச்

ஜெனோவா சொன்னது…

மிகப் பிடித்திருந்தது நண்பா , தொடர்ந்து எழுது!
வாழ்த்துக்கள்

மாரி-முத்து சொன்னது…

#நன்றிங்க "அடலேறு"
#நன்றிங்க "ஜோ"

Prakash சொன்னது…

மீண்டும் பாராட்டுகள் உன் கவிதைக்கு...

நேசமித்ரன் சொன்னது…

மிக நல்ல முயற்சி மாரி முத்து

தொடர்ந்து எழுதுங்க வாழ்த்துகள்

மாரி-முத்து சொன்னது…

# பிரகாஷ் - நன்றி தோழா..
#நேசமித்திரன் - வணக்கம் சார்...முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி...
உங்கள் பதிலைப் பார்த்ததும் மிகவும் மகிழ்ந்தேன்...
உங்கள் கவிதைகளைப் பார்த்து வியந்துகொண்டு இருப்பவர்களில் நானும் ஒருவன்.....

Cable Sankar சொன்னது…

அடடா..உச்சா போயிட்டானா.. நல்லாருக்குங்க

மாரி-முத்து சொன்னது…

வணக்கம் கேபிள் சார்...
ஆமாங்க..
நன்றிங்க..
( கொத்து பரோட்டா போட்டு கலக்குறீங்களே!!)

இரசிகை சொன்னது…

:)

மாரி-முத்து சொன்னது…

ௐ ௐ ௐ ௐ ௐ ௐ ௐ
ௐ ௐ ௐ ௐ ௐ ௐ ௐ
ௐ ௐ
.....ௐ ௐ
ௐ ௐ
.....ௐ ௐ ௐ ௐ ௐ
ௐ ௐ
.....ௐ ௐ ௐ ௐ ௐ
ௐ ௐ
.....ௐ ௐ.....ௐ ௐ
.........................ௐ ௐ
............ௐ ௐ ௐ ௐ ௐ
............ௐ ௐ ௐ ௐ ௐ..ன்றிகள்
............ௐ ௐ