• முகப்பு
  • .
  • .
  • .
  • .

திங்கள், 11 ஜனவரி, 2010

சிட்டாளு...ருக்கு வச்ச அருவா
கையில எடுத்துட்டு
கெளம்பிடுவ நெல் அறுக்க,
முறுக்கு தின்ன ஒருவா
பொஸ்தகப்பையில வச்சிட்டு..

சோத்துப் போசியில
நான் சுடுசோத்தப் போட்டுட்டு
பொட்டி தேப்பேன் எஞ்சட்டய,
பள்ளிகோடம் போறதுக்கு,

ன் புதுசட்டயில பிச்செறிஞ்ச
குண்டூசிக் கம்பியெல்லாம்
நாம்பாத்தேன்
உன்செருப்பு வாரு மேல....

ழைத்தண்ணிய நான் பாத்தேன்
ஊட்டுக்குள்ள ஒழுகுறப்போ
ஒங்கண்ணுல ..

நீ
ஞ்சக் காட்டுல பூடு பறிச்சு
மாட்டுக் கொட்டாயில சாணி வழிச்சு
கரும்புத்தோகையுரிச்சு
நடவு நட்டி
நான் முழுசா
எட்டாங்கிளாஸ் படிக்கறதுக்குள்ள
பாதியாய் சுருங்கிப்போனே.

போதுமாத்தா நாம்படிச்சது
போகாதே இதுக்கப்புறம் வேலைக்கு,
கால் வயிறு
தின்னாலும் உங்கையாலே
திங்க வேணும்....
இப்ப நாஞ்சிட்டாளு
நாளைக்கு எனக்கு
கீழ எட்டாளு

சாமி மேல சத்தியமா
எனக்கு எந்த வெசனமுமில்ல,
பள்ளிக்கோட புள்ளைகளெல்லாம்
என்னைத்தாண்டி போகுறப்ப
கண்ணு மட்டும் துளிவேள
கலங்கிடும்...
சித்த நேரத்துல
தெளிஞ்சுடும்......
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
(உரையாடல் அமைப்பு நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது )
-----------------------------------------------------------------------------------------------------------

11 நினைவலைகள்:

hemikrish சொன்னது…

கண் கலங்கிடுச்சு....வெற்றி பெற வாழ்த்துக்கள்

அடலேறு சொன்னது…

வலியை வார்த்தை படுத்தியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் நண்பா வெற்றி பெற

மாரி-முத்து சொன்னது…

#ஹெமிக்ரிஷ் - முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.....
//சித்த நேரத்துல
தெளிஞ்சுடும்.// விடுங்க....

மாரி-முத்து சொன்னது…

#அடலேறு - நன்றி அடலேறு நண்பரே...
ரொம்ப நாளைக்கப்புறம் உங்க பதிலப்பார்த்ததும் மகிழ்ச்சி...
(பழைய பதிவுகள்ல மொக்கப் போட்டுட்டேனோ....??)

ஜெனோவா சொன்னது…

யதார்த்த வாழ்வின் அழகியலுடன் கோர்க்கப்பட்ட வரிகள் நண்பா ... நீ போட்டிக்காக தேர்ந்தெடுத்த கவிதையின் தளம் மகிழ்ச்சியளிக்கிறது

வெற்றி பெற வாழ்த்துக்கள் மாரி..
விரையில் சந்திப்போம் அல்லது பேசுவோம்

சக்தியின் மனம் சொன்னது…

வெற்றி பெற வாழ்த்துகள்

Rajeshkumar சொன்னது…

மாரி.. ரொம்ப அருமை.. இதை நீ விகடனுக்கு அனுப்பி வை.. கண்டிப்பா பிரசுரம் ஆகும்..

மாரி-முத்து சொன்னது…

#ஜோ - //யதார்த்த வாழ்வின் அழகியலுடன் கோர்க்கப்பட்ட வரிகள் நண்பா ... நீ போட்டிக்காக தேர்ந்தெடுத்த கவிதையின் தளம் மகிழ்ச்சியளிக்கிறது //
இத்தனை நாட்கள் காத்து இருந்து கோர்க்கப்பட்ட வரிகளுக்கும், தளத்துக்கும் கிடைத்த வெகுமதி எனக்கு மகிழ்ச்சி தருகிறது நண்பா...

//விரைவில் சந்திப்போம் அல்லது பேசுவோம்//
கண்டிப்பாக...

மாரி-முத்து சொன்னது…

#சக்தியின் மனம் - முதல் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிங்க

மாரி-முத்து சொன்னது…

ராஜேஷ் குமார் - நன்றி நண்பா...ரொம்ப நாளைக்கு பிறகு உன் பதிலைப் பார்த்ததில் மகிழ்ச்சி நண்பா...

தியாவின் பேனா சொன்னது…

நல்லாருக்கு