___________________________________________________________________
வீட்டில் பணத்தைத் திருடியதால்
தன்னோடு யாரும்
முகம் கொடுத்துப் பேசுவதில்லை
என்பதை தலைகுனிந்து,
கண்கள் குளமாக
அவனிடம் சொல்லிகொண்டிருந்தான் ...
இவன் ,
இடக்கை
அவனை அறியாமல்
இவனைத் தேற்றியது...
வலக்கை
இவன் அறியாமல்
சட்டைப்பை பணத்தை
தொட்டுப் பார்த்தது ..
___________________________________________________________________
10 நினைவலைகள்:
மச்சி,
வாக்கிய அமைப்பு எல்லாம் ஓகே.. ஆனா கவிதை சொல்ல வர்ற மேட்டர்தான் நல்லாவே இல்ல...
சாரி மச்சி... இது என்னோட விமர்சனம்.. அவ்ளோதான்... புரிதலுக்கு நன்றி..
Regards,
Parthiban
http://lazysystemadmin.blogspot.com
வா பார்த்தி ..
விமர்சனத்திற்கு நன்றிகள்..
//சொல்ல வர்ற மேட்டர்தான் நல்லாவே இல்ல//
இது ஒரு புனைவு..... (முழுவதும் காதலைப் பற்றியே எழுதிக்கொண்டிருந்த நான் கொஞ்சம் ட்ராக் மாறி எழுத முயற்சி பண்ணி இருக்கேன்...Its really எ valuable feedback from யு)
நல்ல முயற்சிங்க.... இந்த மாதிரியும் நண்பர்கள் இருக்கத்தான செய்யுறாங்க...
கவிதை நல்லாருக்குங்க.. தொடரவும்...
கூடா நட்பில் ஒரு வகையை அருமையாக சொல்லியிருகீங்க !
இப்படியும் நட்புகள் உண்டென்பதை நாமறிவோம் .. தொடர்ந்து எழுது !
வாழ்த்துக்கள்
நல்ல கவிதை மாரி...
எனக்கு பிடிச்சிருக்கு ...
இப்படியும் நடக்கத்தானே செய்யுது ....
சில நேரங்களில் சில நிகழ்வுகள் ...
#க.பாலாசி - முதல் வருகைக்கும் முத்தான மறுமொழிக்கும் நன்றிகள்
#ஜெனோவா - எழுதுவோம் நண்பா, நன்றிகள்..
#நியோ- முதல் வருகைக்கும் முத்தான மறுமொழிக்கும் நன்றிகள்
//முகநக நட்பாம்...//
நாக்களவு பேச்சாம்!
நல்லா இருக்கிறது நண்பரே
நன்றிங்க வால் மற்றும் பனித்துளி சங்கர்
கவிதைக்கு வாழ்த்துக்கள்.
தொடருங்க.
கருத்துரையிடுக